Tuesday, 28 February 2012

கடமை

உலகத்தை வெறுத்து
உறவுகளை ஒறுத்து

நான் பட்ட வலிகளின்
ரணங்களால்
இப்போதெல்லாம் 
மரணத்தை 
ஏற்றுக்கொள்ளத்தான் 
என் இதயத்துக்கு
ரொம்பப் பிடிக்கிறது
என் பயணத்தை நகர்த்திவிட
எண்ணிப் பார்த்தாலும் 
தமிழர்களுக்கென 
தனிநாடு தேவை
சில கடமைகள்
காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன் 


Sunday, 19 February 2012

இதயம்



பார்க்கும் திசையெங்கும் மனிதனைப் பார்க்கிறேன் 

பழகும் போதுதான் தெரிகிறது இவர்கள் 
இதயத்தை  தொலைத்தவர்களென

Saturday, 18 February 2012

மனசு


எத்தனை முறை மனசு காயப் பட்டாலும் மனதுக்கு பிடித்தவர்களை மறக்க முடியாது காரணம் 
இதயத்துக்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டும்தான் தெரியும்

மௌனம்

மௌனத்தை நேசிக்கும் நீ காதலை நேசித்துப்பார்
காதல் உனக்காக காவல் இருக்கும்.

ஏக்கம்

என்றாவது ஒரு நாள் மனம் விட்டு பேசி விட மாட்டாயா என‌ ஒவ்வொரு நாளும் ஏக்க‌த்தோடு காத்திருக்கின்றேன்

வாழ்க்கை

நீ இல்லா வாழ்க்கை வலிக்குதடி

Monday, 13 February 2012

ஆசை

தாய் மடியில் உறங்கியது போதும்
மரணத்திலாவது உன் மடியில் உறங்கிவிட ஆசை

தேவதை

தேவதைகள் நேரில் வருவதில்லை 
சில தேவதைகள் தோன்றுவார்கள் மனித உருவிலே 
என் மனதை உணரும் இவளும் 
இப் பூமியில் ஒரு தேவதையே

அன்பை

காதலியே உலகத்தில் அன்பைஎதனாலும் அளக்கமுடியாது என்பதை புரிந்துகொண்டேன் 
நான் உன்மேல் கொண்ட அன்பின் மூலம்

Saturday, 11 February 2012

வறுமை


எந்த ரப்பரைக் கொண்டும்
அழிக்க முடியவில்லை
வறுமைக் கோடு

தெரியவில்லை


பிறருக்கு கொடுத்தே
பழகியதாலோ என்னவோ
உன் இதயம் வாங்கத் தெரியவில்லையடி எனக்கு

காதல் நிஜம்





உன் மடியில்
உறங்க ஆசை
விடியும் வரையல்ல
உயிர் பிரியும் வரை

அவள்


தாமரை குளத்தில்
மல்லிகை வாசம் குளித்துப்போயிருப்பாள்.


அம்மா


ஆங்கிலப் பள்ளியில்
அடிவாங்கும் குழந்தை
அழுகிறது.அம்மா

சமுதாயத்தில்

ஓயாமல் உழைத்த தந்தை
ஓய்வெடுக்கிறார்
முதியோர் இல்லத்தில்