முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையின் வடக்கு கிழக்கு இணைந்த பகுதியை தமிழரின் தாயகமாக அங்கீகரிக்குமாறு கோரி ஆயுத ரீதியில் மோதலில் ஈடுபட்டனர்.ஆயினும் அவர்களின் ஆயுதப்போராட்டம் 2009 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மௌனித்தது.
புலிகளின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்தமை தொடர்பாக இராணுவ ஆய்வாளர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை கூறினாலும் புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆழ ஊடுருவும் படையினரை முறியடிக்க தவறியமையாகும்.முன்னர் புலிகளே தமது போராளிகளை இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அனுப்பி தாக்குதல்களை இலகுபடுத்துவர்.அல்லது ஆரம்பிப்பர்.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இரண்டாவது தடவை பதவி ஏற்றபோது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தனது ‘இராணுவ தந்திரோபாயம்.‘ மாற்றினார்.
அது தான் புலிகளின் தந்திரமான ஆழ ஊடுருவும் படையை தாமும் இலாபகமாக பயன்படுத்தலாம் என்பது. அவரின் யோசனையும் நூறு வீதம் சரியானதாகேவே அமைந்தது.இந்த படையணி புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் நுழைந்ததும் முக்கியமான தளபதிகளையே வீழ்த்தியது.இதன் காரணமாக புலிகள் ஆயுத போராட்டத்தை முன்னகர்த்துவதில் இடர்பாடுகளை சந்தித்தனர்.இறுதியில் இராணுவத்தளபதியின் திட்டம் மிகப்பெரியளவில் வெற்றியீட்டியது எனலாம்.
இவ்விடத்தில் ஆழ ஊடுருவும் படையினரின் செயற்பாடுகளை கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அதாவது தமிழ் நாட்டில் இப்போது மாணவர்களின் போராட்டம் உச்சம் பெற்றுள்ளது.அது நாளுக்கு நாள் மாணவர்களில் இருந்து அனைத்து மக்களின் போராட்டமாக மாறுகின்றது.குறிப்பாக பிறமாநிலத்தவரும் இணைந்து கொள்ளும் அளவிற்கு போராட்டம் வீரியகண்டு வருகின்றது.
இப்போராட்டத்தை சாதரணமாக நோக்கிய அரசியல் தலமைகள் இப்போது போராட்டத்தின் போக்கு கண்டு கதிகலங்கும் நிலை உருவாகியிருக்கிறது.அதன் விளைவு தான் கல்லூரிகளுக்கான கட்டாய விடுமுறை. இவ்விடத்தில் தான் தமிழ் நாட்டு மாணவர்கள் அவதானத்துடன் செயலாற்ற வேண்டி இருக்கிறது.காரணம் மாணவர்களுக்குள்ளேயே சம்பந்தபட்ட தரப்புக்கள்,ஒற்றர்களை அனுப்பி போராட்டத்தை சிதைக்கும் தந்திரத்தை மிக கச்சிதமாக செய்து முடிக்கும்.இவ்வாறன நரித்திரத்தை தீட்டுவதில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்களே என்பது தான் பெருமை.
சிலவேளைகளில் வன்முறைகளை தூண்டி விடும் சம்பவங்களும் கூட நிகழ வாய்ப்புண்டு.எந்த விதமான அரசியல்,ஊடக துணையில்லாமல் தனியே தமிழன உணர்வுகளை கொண்டு தொடங்கிய போராட்டம் இறுதியில் பலனின்றி முறியடிப்பதில் நம்மவர் காட்டும் போக்குக்கு இடம் கொடாதீர்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிய புலிகள் உலகில் முப்படையையும் கொண்டு விளங்கினாலும் இறுதியில் ஆழ ஊடுருவும் தரப்பை முறியடிக்க தவறியதன் விளைவு அவர்களின் தோல்விக்கு காரணமாகியது என்றால்,மாணவர் போராட்டத்தை நசுக்குவதற்கு அதிக நேரம் தேவையில்லை.
ஆக மாணவர்களின் போராட்டத்துக்குள் அனுப்படும் ஒற்றர்களை கவனித்து ஒவ்வொரு நாளும் அகிம்சை போராட்டத்தை நகர்த்த வேண்டி இருக்கிறது. இல்லையேல் அகிம்சை போராட்டத்தை நரனகள படுத்தி விடுவர்.கவனம் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் சிந்திக்க வேண்டும்.
